மாத்தளை மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய பிரதேசங்களை இனங்காண்பதுடன், அப் பிரதேசங்களில் மிகவும் ஆபத்தானதெனக் கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தளை மாவட்ட அரச அதிபர் டீ.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார். 

கடந்த (2016) வருடம் பெய்த மழையின் போது மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மாத்தளை தொடன்தெனியவிலும் இறத்தோட்டையின் சில பிரதேசங்களிலும் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இத்தகைய பிரதேசங்களில் அனர்த்தங்களை உணர்த்தும் " சமிக்ஞை ஒலி '  கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் குமாரசிறி குறிப்பிட்டார். 

(Visited 6 times, 1 visits today)