சரியான காலநிலை எதிர்வுகூறல்களை வெளியிடுவதற்கு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு இயலாத நிலை ஒன்று காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு வரை இந்த நிலை காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலைகளை எதிர்வுகூறும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட இரண்டு ரேடார் கட்டமைப்புகளை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. எனினும் அதனை பொருத்துவதற்கு இன்னும் 3 வருடங்கள் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் தற்போது காணப்படுகின்ற தொழில்நுட்பத்திற்கமைய முடிந்த அளவு சரியான காலநிலை எதிர்வுகூறல்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)