இலங்கை அணி வீரர் உப்புல் தரங்க சம்பியன் ட்ராபி தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.  அந்த அணியின் தற்போதை தலைவரான அவர், நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்து வீச்சுக்காக அதிக நேரத்தை வீணடித்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

இதற்கமைய, நேற்றையதினம் இலங்கை அணி 50 ஓவர்கள் பந்து வீச நான்கு மணித்தியாலங்களுக்கும் அதிக காலத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இது நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாகும்.  இதன்படி, உபுல் தரங்க அடுத்து இடம்பெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இடம்பெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

(Visited 10 times, 1 visits today)