’எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் பயன்படுத்தத்தரவில்லை’ எனக் கூறும் பில்கேட்ஸ், இப்போதும் ’குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை’ என்கிறார். ‘இதனால் குழந்தைகளுக்கு இரவு நல்ல உறக்கம் கிடைக்கும்’ என செல்போன் நிறுவன அதிபரே தனது குழந்தைகளின் நலனை கவனத்தில்கொண்டு, செல்போனுக்குத் தடை விதித்திருக்கிறார். 

பில்கேட்ஸ் மெலிண்டா தம்பதியினருக்கு ஜெனிஃபர் (20), ரோரி (17), ஃபீப் (14) என மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது, இவர்கள் மூவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ’ஆப்பிள்’ தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்த தாயார் மெலிண்டா தடை விதித்துள்ளார். இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, மற்றொரு செல்போன் நிறுவனமான ‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்கூட தனது குழந்தைகளுக்கு செல்போன் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 

(Visited 1 times, 1 visits today)