இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே, டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

குணரத்ன , காலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஜூலை மாதத்திலிருந்து இலங்கை அணியில் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலில் குணரத்னவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

எனினும், நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள உடற்தகுதி பரிசோதனையில் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியுமென தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

தேர்வுக் குழு உறுப்பினரான கிரஹாம் லப்ரோய் கூறுகையில்  ; இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குணரத்னவின் பங்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வலக்கை துடுப்பாட்ட வீரரான குணரத்ன, பகுதிநேர பந்து வீச்சாளரும் ஆவார். மேலும் கடந்த ஒன்றரை ஆண்டில் இலங்கை அணியின் சிறந்த வீரராக அவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)