இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுக்கான பயிற்சியாளர் ருமேஸ் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்வரும் 16 ஆம் திகதி கொல்கத்தாவில் இந்தியாவுடன் மோதவுள்ளது. இதற்கான இலங்கை அணி தற்போது தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளரும் முன்னாள் பிரபல பந்து வீச்சாளருமான ருமேஸ் ரட்நாயக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில்;

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை சந்திப்பதற்கு இலங்கை அணி தயாராகவுள்ளது. இதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சாளர்கள் தங்களது கடமையை சரிவரச் செய்வார்களென எதிர்பார்க்கிறோம். சரியான தருணத்தில் அவர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை  இந்திய அணிகளுக்கிடையே இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் இதுவரை இலங்கை அணி ஒரு போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் இலங்கை அணியினர் இருக்கின்றனர்.

அண்மையில் இலங்கை வந்த இந்திய அணி, 3 வகைப் போட்டிகளிலும் அனைத்துப் போட்டிகளிலும் இலங்கையைத் தோற்கடித்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)