இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்யூஸ் பந்து வீசுவாரா என்பது தொடர்பில் இது வரை முடிவெதுவும் எட்டப்படவில்லை.
காயத்திலிருந்து மீண்டுள்ள அஞ்சலோ மத்யூஸ் இந்தத் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் பந்துவீசமாட்டார் என்று அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரட்நாயக்க தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அவர் பந்துவீச மாட்டார் என்ற தீர்மானத்துக்கு வரவில்லை என்று அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவை ஏற்படும் போது அவரது பந்துவீச்சை பயன்படுத்தவும் அணித் தலைவர் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் அணிக்குமிடையிலான இருநாள் பயிற்சிப் போட்டியில் அவர் 5 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்.

காயம் குணமடைந்துள்ள போதும் பந்து வீசுவதால் மீண்டும் அவர் காயமடையலாமென அஞ்சப்படுவதாலேயே அவரை பந்து வீச அழைப்பதா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லையெனக் கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)