அஜித்தின் 58வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் சாய் சித்தார்த் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், இப்படத்தின் டைட்டில் ‘விசுவாசம்’ என்று வைக்கப்பட்டுள்ளது.  அதோடு ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும் இத்திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் விவேகம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. இதனை தொடர்ந்து அஜித் 4வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்மை ரேஸில் இருப்பது  அனுஷ்கா, தமன்னா தானாம், இவர்களில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால், சிவா  எப்போதும் ஜோடி புதிதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதற்காக கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடந்து  வருவதாக கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)