அடுத்த வருட இறுதிக்கு முன்னர் சர்வதேச கடற்பிராந்தியத்தில் இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குளங்களில் நீர்வாழ் உயிரினங்களை அபிவிருத்தி செய்வதற்காக இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் என்ற ரீதியில் ஐக்கியநாடுகள் சபையின் அபிவிருத்தி பிரிவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இதற்கான திட்டம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)