இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, களமிறங்கிய அந்த அணி, இலங்கையின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது 44 ஓவர்களில் 198 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் ரெய்லர் 58, கிரீமர் 34, வலர் 24, மிரே 21 ஓட்டங்களைப் பெற்றனர். இலங்கை அணி சார்பாக திசாரபெரேரா 4, நுவான் பிரதீப் 3, சந்தகன் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 199 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்ளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 49, குசல் மெண்டிஸ் 36, தரங்க 17, திக்வெல 7, அசேல குணரட்ன9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கப்டன் சந்திமல் 38,
திசார பெரேரா39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.

(Visited 22 times, 1 visits today)