ஐ.பி.எல். ஏலத்தில் கலந்துகொள்ள 1,122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். 11 ஆவது சீசன் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் பெங்ளூரில் நடக்கிறது.

ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து டெஸ்ட் அணி கப்டன் உட்பட 1, 122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில் 578 பேர் ஏலத்தில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்வின், வெயின் பிராவோ, கிறிஸ்கெய்ல், பொலார்ட், ஜோரூட், பென் ஸ்டொக்ஸ் போன்றோர் ஏலம் மூலம் எடுக்க இருக்கிறார்கள்.

மொத்தம் 36 பேரின் அடிப்படை விலை 2 கோடி ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 பேர் இந்திய வீரர்கள், 23 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

32 பேரின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 31 பேரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாவாகவும் 23 பேரின் அடிப்படை விலை 75 இலட்சம் ரூபாவாகவும் 122 பேரின் அடிப்படை விலை 50 இலட்சம் ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14 வீரர்களின் அடிப்படை விலை 40 இலட்சமாகவும் 17 பேரின் விலை 30 இலட்சமாகவும் 303 பேரின் விலை 20 இலட்சம் ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலம் எடுக்கலாம்.

(Visited 16 times, 1 visits today)