“அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம்’ என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்தவர்களுடன் நடைபெறவிருந்த கலந்துரையாடல் அநாம தேய அறிவிப்புகளால் திடீரென இரத்துச் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை லண்டனில் இந்தக் கூட்டம் நடைபெறவிருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்கவிருந்தார்.

எனினும், சில தரப்பினரின் எதிர்ப்புகள் மற்றும் பிரசாரங்களை அடுத்து வீணான குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் இந்தக் கூட்டம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்ததாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமந்திரன் எம்.பி. லண்டனிலிருந்து கனடா சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

(Visited 13 times, 1 visits today)