இலங்கை ஒருநாள் அணியின் கப்டன் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக பங்களாதேஷில் நடைபெறும் முக்கோண தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.

பங்களாதேஷில் தற்பொழுது, இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே பங்கேற்கும் முக்கோண ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில், இலங்கை அணியின் கப்டன் மத்தியூஸ் முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்ததையடுத்து 2 ஆவது போட்டியில் பங்கேற்கவில்லை.

இவரது காயம் மோசமான நிலையில் இருப்பதால் அடுத்த 3 வாரங்களுக்கு ஓய்வெடுக்கவேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியதையடுத்து இந்தத் தொடரில் இருந்து விலகிய அஞ்சலோ மத்தியூஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை திரும்பியுள்ளார்.

அண்மைக் காலமாக காலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் பெரிதும் அவதிப்பட்டு வரும் அஞ்சலோ மத்தியூஸ் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை. சில தொடர்களில் அவர் பங்கேற்றாலும் ஓரிரு போட்டிகளுடன் வெளியேறும் நிலையே ஏற்பட்டு வருகின்றது.

அஞ்சலோ மத்தியூஸ் அணியின் முக்கிய பலமாக இருக்கின்றபோதிலும், அடிக்கடி காயமடைவதால் இலங்கை அணி பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நிலையில், மத்தியூஸ் நேற்றைய தினம் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

(Visited 29 times, 1 visits today)