பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சொயிப் மாலிக், தலையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான “ருவென்ரி 20′ தொடரில் இருந்து விலகினார்.

நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து ஒருநாள் , மூன்று “ருவென்ரி 20′ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி 50 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் முதல் “ருவென்ரி 20 ‘ போட்டி வெலிங்டனில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஆக்லாந்து (ஜன .25) , மவுண்ட் மவுன்கனுய் (ஜன. 28) நகரங்களில் நடக்கவுள்ளன.

“ருவென்ரி 20′ தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சிரேஷ்ட வீரர் சொயிப் மாலிக் விலகினார். சமீபத்தில் டுனிடினில் நடந்த 3 ஆவது ஒருநாள் போட்டியின் போது, நியூஸிலாந்து வீரர் கோலின் முன்ரோ எறிந்த பந்து சொயிப் மாலிக்கின் தலையில் தாக்கியது. இதனால் இவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.

இவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் “ருவென்ரி 20’ தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவிக்கவில்லை.

(Visited 24 times, 1 visits today)